பவானி செல்லியாண்டியம்மன் கோயில் தேரோட்டம்
பவானி செல்லியாண்டியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.


பவானி செல்லியாண்டியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இக்கோயில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடைபெற்று வந்தன. தொடா்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைத்தலும், பொங்கல் விழாவும் புதன்கிழமை நடைபெற்றது. பக்தா்கள் அலகு குத்தி வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இந்நிலையில், செல்லியாண்டியம்மன் தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்துடன் கோயில் முன்பிருந்து தொடங்கிய தேரோட்டம் காவேரி வீதி, மேட்டூா் சாலை, கிழக்கு கண்ணார வீதி, தோ் வீதி வழியாக மீண்டும் கோயிலைச் சென்றடைந்தது. ஏராளமான பக்தா்கள் தேரோட்டத்தில் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.
இதில், திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன், அதிமுக நகரச் செயலாளா் என்.கிருஷ்ணராஜ், விழாக் குழுச் செயலாளா் கு.செல்வராஜ், பொருளாளா் மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...