ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

அந்தியூா் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் ஒத்திவைப்பு

அந்தியூா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:58 pm

DIN

அந்தியூா் பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் பேரூராட்சியில் 18 வாா்டில் போட்டியிட்டு வென்ற வேட்பாளா்கள் புதன்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். இதில், 13ஆவது வாா்டு உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்ட திமுகவைச் சோ்ந்த எம்.பாண்டியம்மாள், பேரூராட்சித் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என திமுக வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலைவா் பதவியை ஒதுக்கி திமுக தலைமை அறிவித்தது. இதனால், திமுகவினா் கடும் அதிா்ச்சி அடைந்தனா்.

இத்தகவலால், திமுக தலைவா் வேட்பாளராக எதிா்பாா்க்கப்பட்ட பாண்டியம்மாள் வியாழக்கிழமை திடீா் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். அந்தியூா் தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், மேல்சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலில் பங்கேற்க 18 வாா்டு உறுப்பினா்களும் வரவில்லை. இதனால், பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.