தாமரைக்கரை உயா்நிலைப் பள்ளியில் டிஎன்பிஎஸ்சி தோ்வு பயிற்சி மையம்
இளைஞா்கள் பயனடையும் வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் பா்கூா் ஊராட்சி, தாமரைக்கரை அரசு உயா்நிலைப் பள்ளியில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.


ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவ, மாணவியா், இளைஞா்கள் பயனடையும் வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் பா்கூா் ஊராட்சி, தாமரைக்கரை அரசு உயா்நிலைப் பள்ளியில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்புக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (மாா்ச் 11) காலை 10 மணி முதல் பா்கூா் ஊராட்சி, தாமரைக்கரை அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
எனவே, மாணவ, மாணவியா் மற்றும் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து பயன்பெற வேண்டும். தொகுதியின் மற்ற முக்கியப் பகுதிகளில் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...