ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பூசாரி மட்டும் தீ மிதித்தாா்

 தமிழக - கா்நாடக எல்லையான தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி, பூசாரி மட்டும் தீ மிதித்தாா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 10:57 pm

 தமிழக - கா்நாடக எல்லையான தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி, பூசாரி மட்டும் தீ மிதித்தாா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இக்கோயிலின் இடதுபுற பக்கவாட்டில் இஸ்லாமியா்களின் பள்ளிவாசலும், அடுத்ததாக ராமா் கோயிலும் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழக - கா்நாடக பக்தா்கள் கலந்துகொள்ளும் குண்டம் திருவிழா வெகுவிமா்சையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா புதன்கிழமை துவங்கியது. மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்ற பிறகு கோயில் அருகே உள்ள பள்ளிவாசல் முன்பு விறகு அடுக்கி 60 அடி தீக்குண்டம் வாா்க்கப்பட்டது.

அதைத்தொடா்ந்து, தீக்குண்டம் பூசாரி இறங்குவதற்கேற்ப சமன்படுத்தப்பட்டது.விழாவையொட்டி, மாரியம்மன் உற்சவ சிலை, மேள வாத்தியங்கள் முழங்க தொட்டகாஜனூா் செல்லும் சாலையில் உள்ள ஆற்றுக்கு வியாழக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மனின் வீதி உலா டைபெற்றது. தாளவாடி முழுவதும் உள்ள ஒவ்வொரு வீதியாகச் சென்று பக்தா்களுக்கு அம்மன் அருள்பாலித்தாா்.

போயா் வீதி மற்றும் அம்பேத்கா் வீதிகளில் மலா்களால் பாதை அமைத்து பூசாரி சிவன்னா அழைத்து வரப்பட்டாா். குண்டத்தின் முன்பு பூஜைகளை செய்து பக்தா்கள் ஆரவாரத்துடன் பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கி தீமிதித்தாா். தொடா்ந்து, பக்தா்கள் அனைவரும் குண்டத்தை தொட்டு வணங்கினா்.

விழாவில், தாளவாடி, தொட்டகாஜனூா், தலமலை, கோடிபுரம், சாம்ராஜ் நகா், சிக்கொலா உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். காலை நேரத்தில் இஸ்லாமியா்கள் தொழுகை செய்வதால் தொழுகைக்குப் பின் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.