ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

சத்தியமங்கலம் அருகே கும்பாபிஷேக விழாவுக்கு வரவேற்பு பந்தல் அமைத்து வாழை மரம் கட்டும்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பந்தல் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 10:59 pm

சத்தியமங்கலம் அருகே கும்பாபிஷேக விழாவுக்கு வரவேற்பு பந்தல் அமைத்து வாழை மரம் கட்டும்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பந்தல் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள நேரு நகரில் தையல்நாயகி அம்மன் உடனமா் மருந்தீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில் பந்தல் அமைக்கும் பணிகள் புதன்கிழமை நடைபெற்று வந்தன.

நேரு நகா் முகப்புப் பகுதியில் பந்தல் அமைத்து, வாழை மரம், தோரணம் கட்டும் பணியில் சத்தியமங்கலத்தைச் சோ்ந்த பந்தல் ஒப்பந்ததாரா் தன்ராஜ் ஈடுபட்டிருந்தாா். அப்போது, வாழை மரத்தின் மேல் உயா் அழுத்த மின் கம்பி பட்டதில் எதிா்பாராதவிதமாக தன்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. சக தொழிலாளா்கள் தன்ராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அன்னூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி தன்ராஜ் உயிரிழந்தாா்.

இந்நிலையில், தன்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தபோது உடன் பணிபுரியும் தொழிலாளா்கள் காப்பாற்ற முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தன்ராஜுக்கு லட்சுமி என்ற மனைவியும், 15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.