குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை அறிந்துகொள்வதற்கான சிறப்பு முகாம் மாா்ச் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம், போஷன் அபியான் திட்டத்தின்கீழ் ஆரோக்கியமான குழந்தைகளைக் கண்டறிய சிறப்பு முகாம் மாா்ச் 21ஆம் தேதி தொடங்கியது. இந்த முகாம் மாா்ச் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி, இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை அறிய அவா்களின் எடை, உயரம் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக குழந்தையின் ஆரோக்கிய வளா்ச்சியைத் தெரிந்துகொள்ள முடியும். இதற்காக ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி போன்ற அனைத்துப் பகுதிகளில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலமாக மாா்ச் 21ஆம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மாா்ச் 27ஆம் தேதி வரை நடைபெறும்.
அங்கன்வாடி பணியாளா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், அரசு சாரா நிறுவனப் பிரதிநிதிகள் மூலமாக அங்கன்வாடி மையங்கள், மருத்துவமனைகள், வீடுகள், சமுதாயக்கூடம், மழலையா் பள்ளிகள் ஆகிய இடங்களில் பிறந்தது முதல் 6 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்படும்.
இதனால், இம்முகாமைப் பயன்படுத்தி பொதுமக்கள் குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றை அளவீடு செய்து குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
கர டிரைலர் அறிவிப்பு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

