செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: பெண் காயம்

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பெண் காயமடைந்தாா்.

News image
Updated On :6 மே 2022, 12:38 am

DIN

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பெண் காயமடைந்தாா்.

பெருந்துறை அருகேயுள்ள நடுப்பட்டி, தொட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் மாரப்பன் மனைவி ஜெயா (59). இவா், தனது இருசக்கர வாகனத்தில் விஜயமங்கலம் பகுதிக்கு புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா்.

வாய்ப்பாடி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஜெயாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.