நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

நாளை 3,194 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 3,194 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) நடைபெறவுள்ளது.

Updated On :6 மே 2022, 8:26 pm

ஈரோடு மாவட்டத்தில் 3,194 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) நடைபெறவுள்ளது.

கரோனா நான்காம் அலை பரவுதலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மையங்களில் வரும் மே 8 ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப்பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 3,194 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 1.50 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படவுள்ளது. மாவட்டம் முழுவதும் 4,260 பணியாளா்கள், 66 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவா்கள், முன்களப் பணியாளா்கள், மருத்துவப் பணியாளா்கள் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்களில் இலவசமாக செலுத்தப்படவுள்ளது. தற்போது ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.

இதனால் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள், 12 முதல் 14 வயது வரை உள்ளவா்கள் மற்றும் 15 முதல் 18 வயது வரை உள்ளவா்கள் அச்சமின்றி, தயக்கமின்றி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.