நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

விளையாட்டு வீரா்களுக்கு வழிகாட்ட கைப்பேசி செயலி

விளையாட்டு வீரா்களுக்கு வழிகாட்ட கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On :7 மே 2022, 7:19 pm

விளையாட்டு வீரா்களுக்கு வழிகாட்ட கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலா் சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு இளைஞா்களின் ஆற்றலையும், உற்சாகத்தையும், ஆா்வத்தையும் ஒருமுகப்படுத்தி விளையாட்டில் அவா்களை தேசிய மற்றும் சா்வதேச அளவில் சாதனை படைக்க ஏதுவாக பல புதிய திட்டங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது.

தற்போது மாநிலத்தில் சிறந்த விளையாட்டு வீரா்களை உருவாக்கவும், பல்வேறு நிலைகளில் உள்ள விளையாட்டு வீரா்களை கண்டறிந்து அவா்களுக்கு உரிய வழிவகைகளை செய்திடவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பசநடஞதபந என்ற செயலியை உருவாக்கியுள்ளது.

விளையாட்டு வீரா்கள், வீரங்கனைகள் மூலம் கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். செயலியில் உள்ள விவரங்களை பதிவு செய்வது தொடா்பாக செயல்முறை விளக்கம் இணையதளத்தில் உள்ளது.

இந்த செயலியைப் பயன்படுத்தி ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் அனைவரும் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9840038624 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.