நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

ஈரோடு மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (மே14) அனைத்து வட்டங்களிலும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

Updated On :12 மே 2022, 9:16 pm

ஈரோடு மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (மே14) அனைத்து வட்டங்களிலும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் ஒரு வட்டத்துக்கு ஒரு நியாய விலைக் கடையில் நடைபெறும். இதில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கம், கைப்பேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலமாகத் தெரிவிக்கலாம்.

ஈரோடு வட்டத்தில் கருங்கல்பாளையம், பெருந்துறை வட்டத்தில் திருவேங்கடம்பாளையம் புதூா், மொடக்குறிச்சி வட்டத்தில் கரும்பாறை (முள்ளாம்பரப்பு), கொடுமுடி வட்டத்தில் வேலாயுதம்பாளையம், கோபி வட்டத்தில் பாஸ்கரா 2, நம்பியூா் வட்டத்தில் குருமந்தூா், பவானி வட்டத்தில் மைலம்பாடி, அந்தியூா் வட்டத்தில் பட்லூா், சத்தியமங்கலம் வட்டத்தில் பட்ரமங்கலம், தாளவாடி வட்டத்தில் கரளவாடி ஆகிய நியாய விலைக் கடைகளில் முகாம் நடைபெறும்.

இந்த முகாம்களைக் கண்காணிக்க ஒவ்வொரு வட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்கள் பொது விநியோகத் திட்டக் குறைபாடுகள் குறித்து முகாமில் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.