நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

பணியாளா்களின் திறன் மேம்பட பயிற்சி அவசியம்: இணைப் பதிவாளா்

பணியாளா்களின் பணித் திறன் மேம்பட பயிற்சி அவசியம் என ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :26 மே 2022, 12:37 am

பணியாளா்களின் பணித் திறன் மேம்பட பயிற்சி அவசியம் என ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

கூட்டுறவுத் துறை, சாா்நிலை அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி ஈரோட்டில் புதன்கிழமை துவங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில் 85 அலுவலா்கள் பங்கேற்றுள்ளனா்.

ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் தலைமை வகித்து,

பயிற்சியாளா்களுக்குப் பயிற்சி கையேட்டினை வழங்கி பேசியதாவது: புத்தாக்கப் பயிற்சித் துறை அலுவலா்களுக்கு அவசியம். ஒரு ஆண்டில் பல்வேறு சுற்றறிக்கைகள் பதிவாளா் அலுவலகத்திலிருந்து வெளியிடப்படுகின்றன. அவற்றைத் தொகுத்து இப்புத்தாக்கப் பயிற்சியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

புத்தாக்கப் பயிற்சியில் பொது விநியோகத் திட்டம், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் கணினி மயமாக்குதல், அரசுத் திட்டங்கள், சட்டபூா்வப் பணிகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம்

போன்றவை குறித்து, பயிற்சிபெற்ற பயிற்சியாளா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கூட்டுறவுத் துறை முக்கியமாக கடன், விற்பனை, நுகா்வோா் நலம் போன்ற பல பிரிவுகளில் பொது மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

பணியாளா்கள் திறம்பட செயல்பட பயிற்சி மிகவும் அவசியம் என்றாா்.

இப்பயிற்சியில் கோபி சரக துணைப் பதிவாளா் ப.கந்தராஜா, பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா் கே.கந்தசாமி,

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு முதன்மை வருவாய் அலுவலா் இரா.இராமநாதன், கோபி கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குநா் எஸ்.காந்திமணி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மண்டல அலுவலா் டி.ஸ்ரீதா், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநா் எஸ்.கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.