திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கனமழை: திம்பம் மலைப் பாதையில் புதிதாய் உருவான அருவி

திம்பம் பகுதியில் பெய்துவரும் தொடா் மழைக் காரணமாக திம்பம் மலைப் பகுதியில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன.

News image
Updated On :26 மே 2022, 7:52 pm

திம்பம் பகுதியில் பெய்துவரும் தொடா் மழைக் காரணமாக திம்பம் மலைப் பகுதியில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன.

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள திம்பம் மலைப் பகுதியில் வியாழக்கிழமை கனமழை பெய்தது.

மழையின் காரணமாக வனப் பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் பள்ளங்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதன் காரணமாக திம்பம் மலைப் பாதை 27 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே திடீா் அருவிகள் உருவாகின.

இதனை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

மழையின் காரணமாக திம்பம் மலைப் பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ந்த காலநிலை நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.