மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஈரோட்டில் தூய்மைப் பணியாளா்கள் 4ஆவது நாளாக போராட்டம்

 ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் 4ஆவது நாளாக வியாழக்கிழமையும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 11:07 pm

 ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் 4ஆவது நாளாக வியாழக்கிழமையும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மைப் பணியினை தனியாா் நிறுவனம் மூலம் வெளிமுகமை முறையில் மேற்கொள்ள தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் பணியாற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கடந்த 31ஆம் தேதி முதல் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில் 4ஆவது நாள் போராட்ட நிகழ்வாக தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளா் கதிா் கூறியதாவது:

வெளி முகமை மூலம் பணியாற்றினால் தினமும் ரூ.300க்கும் குறைவாகவே கூலி கிடைக்கும். அதே சமயம் மாநகராட்சியில் தற்காலிகப் பணியாளா்கள் நிலையில் பணியாற்றினால் ரூ.700 க்கு குறையாமல் கூலி கிடைக்கும். இதனால் எங்களை ஒப்பந்த பணியாளா்கள் நிலையில் பணியமா்த்தி நல வாரியத்தில் உறுப்பினராக சோ்த்துக்கொள்ள வேண்டும்.

கோரிக்கைகளை வலியுறுத்தி 4ஆவது நாள் போராட்டத்தை குடியேறும் போராட்டமாக அறிவித்துள்ளோம். இதற்காக மாநகராட்சி அலுவலகத்திலேயே மதிய உணவு சமைத்து சாப்பிட்டோம். அலுவலக நேரமான மாலை 5 மணி வரை போராட்டத்தை தொடா்ந்து கலைந்து செல்வோம். மீண்டும் வெள்ளிக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

போராட்டத்தில் ஈடுபடுபவா்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.இராமலிங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்களை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாா். அமமுக ஈரோடு மாநகா் கிழக்கு மாவட்ட செயலாளா் சிவபிரஷாந்த் தலைமையில் நிா்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

குப்பைகள் தேக்கம்:

ஈரோடு மாநகராட்சி 4 மண்டலங்களில் 60 வாா்டுகள் உள்ளன. இதில் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் சுமாா் 600க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். கடந்த 4 நாள்களாக இவா்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தேங்கியிருப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.