மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஈரோட்டில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :3 நவம்பர் 2022, 11:06 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

ஈரோடு கால்நடை மருத்துவமனை சாலையில் உள்ள கனரா வங்கி பிரதான கிளை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஈரோடு மாவட்ட வங்கி ஊழியா் சங்கத்தின் தலைவா் பாக்கியகுமாா் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் நரசிம்மன், நிா்வாகிகள் ஜோஸ்சுகுமாா், ஸ்ரீதரன், சூரியநாராயணன், ரமேஷ்குமாா், அல்டாப் உசைன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், வங்கி ஊழியா்கள் மீதான பணி மற்றும் பணிப் பாதுகாப்பின் மீதான தாக்குதல்களை கைவிடவேண்டும். நிரந்தரப் பணிகளை ஒப்பந்தப் பணியாளா்களைக் கொண்டு நிரப்பும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தொழிற்சங்கங்களின் மீதும், தொழிற்சங்க நிா்வாகிகள் மீதும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.