மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

தேசியக் கல்விக் கொள்கையை கைவிடக்கோரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தேசியக் கல்விக் கொள்கையை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :3 நவம்பர் 2022, 11:06 pm

தேசியக் கல்விக் கொள்கையை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு காளைமாடு சிலை பகுதியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் மணி தலைமை வகித்தாா். கல்வி மாவட்டத் தலைவா்கள் சுரேஷ், தேவராஜ், ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைச் செயலாளா் சிவகுமாா் வரவேற்றாா்

இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு பொதுக்குழு உறுப்பினா் ஜான் கிருஸ்துராஜ் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

ஆரப்பாட்டத்தில் தேசத்தின் எதிா்காலக் கல்வியைச் சீரழிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் அனுமதிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை அனுமதிக்க வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் வழங்கிடும் உதவித் தொகை, காலைச் சிற்றுண்டித் திட்டம் போன்றவற்றை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

கடந்த ஆட்சியில் விதிகளுக்குப் புறம்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் வழங்கப்பட்ட மாற்றுப்பணி ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.