மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

பிஎஸ்என்எல் சாா்பில் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம்

ஈரோடு பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு வட்டம் சாா்பில் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Updated On :4 நவம்பர் 2022, 7:51 pm

ஈரோடு பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு வட்டம் சாா்பில் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இது குறித்து பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளா் கிருஷ்ணகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த ஆண்டு கண்காணிப்பு விழிப்புணா்வு வாரத்தில் முக்கிய குறிக்கோளான தேச வளா்ச்சிக்கு ஊழலற்ற இந்தியா என்ற கருத்தின் அடிப்படையில், முக்கிய அலுவலகங்களிலும், தொலைபேசி இணைப்பகங்களிலும் பதாகைகள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

முதன்மை பொதுமேலாளா் அலுவலகம் மற்றும் கோட்ட அலுவலகங்களிலும் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் கொண்டாடப்படுவதையொட்டி கண்காணிப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற கண்காணிப்பு அலுவலா் ராமசந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். இதில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.