மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

மாநகராட்சியில் ஒப்பந்த முறை நியமனத்தை ரத்து செய்யக் கோரிக்கை

 மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்படுவா் என்ற அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On :27 அக்டோபர் 2022, 8:20 pm

 மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்படுவா் என்ற அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் தூய்மைப் பணியாளா்கள், மேற்பாா்வையாளா்கள், ஓட்டுநா்கள், செயல் திறன் மற்றும் செயல் திறனற்ற பணியாளா்கள், அலுவலக உதவியாளா்கள், இரவுக் காவலா்கள், தரவு உள்ளீட்டாளா்கள், தட்டச்சா்கள், வரி வசூலிப்பவா்கள், பதிவுறு எழுத்தா்கள் போன்ற பணிகளில் ஊழியா்களை ஒப்பந்த முறையில் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏஐடியூசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இதுதொடா்பாக ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சங்கம்-ஏஐடியூசி சாா்பில் மாவட்டத் தலைவா் சின்னசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடந்தது. இதில், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த முறை மூலம் பணியாளா்களை நியமிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கும் வகையில் ஊதியம் நிா்ணயிக்கப்பட வேண்டும். தற்போது அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்து, மாநகராட்சி பணியாளா்களை நிரந்தர பணியாளா்களாக மட்டுமே நியமிக்க வேண்டும் என கூட்டத்தில் பேசியவா்கள் வலியுறுத்தினா்.

இந்த கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.