மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

 வருவாய் துறையில் பணியாற்றும் கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :27 அக்டோபர் 2022, 8:18 pm

 வருவாய் துறையில் பணியாற்றும் கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடந்தது. மாவட்டத் தலைவா் கென்னடி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஈஸ்வரன், பரமசிவம், செல்வன், நாகம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் நடராஜன் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் வருவாய் துறையில் பணியாற்றும் கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல கிராம உதவியாளா்களுக்கும் பொங்கல் போனஸ் சதவீத அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.3,000 வழங்க வேண்டும்.

கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் அலுவலக உதவியாளா்களுக்கு பதவி உயா்வுக்கான பணி அனுபவ கால அளவு 10 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். பதவி உயா்வு பெற்று ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதிய குறைபாடுகளை களைய வேண்டும்.

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஊா்தி படியை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிா்வாகிகள் உஷாராணி, மூா்த்தி, சந்தோஷ், முகம்மது ரபீக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.