தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

டெம்போ கவிழ்ந்து பெண் தொழிலாளி பலி; 16 போ் காயம்

 சத்தியமங்கலம் அருகே டெம்போ கவிழ்ந்து பெண் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும், 16 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:38 pm

 சத்தியமங்கலம் அருகே டெம்போ கவிழ்ந்து பெண் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும், 16 போ் காயமடைந்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த புதுக்கொத்துக்காட்டைச் சோ்ந்த 16 கட்டடத் தொழிலாளா்கள் ராஜன் நகரில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவுக்காக டெம்போவில் சென்றுள்ளனா். விழா முடிந்த பிறகு மீண்டும் சத்தியமங்கலம் நோக்கி டெம்போவில் வந்து கொண்டிருந்தனா். டெம்போவை சல்மான் என்பவா் ஓட்டி வந்தாா். தாண்டாம்பாளையம் என்ற பகுதியில் அதிக வேகம் காரணமாக நிலைதடுமாறி சாலையோரம் நின்றிந்து காா் மீது டெம்போ மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கவிதா என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், டெம்போ ஓட்டுநா் உள்பட 16 போ் காயமடைந்தனா். இதில் காயமடைந்தவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையடுத்து, சிலா் உயா் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.