குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

குடியரசு தினத்துக்கு விடுமுறை அளிக்காத 70 கடைகள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குடியரசு தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 70 கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

குடியரசு தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 70 கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தலைமையில் தொழிலாளா் துறை துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் ஆய்வு செய்தனா்.

ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில்

43 கடைகள், 41 உணவு நிறுவனங்கள், 9 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 93 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 70 நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காமலும், பணியாற்றிய தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க அல்லது மாற்றுவிடுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி அதன் நகலினை சம்பந்தப்பட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறமாலும் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாள்கள்)சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.