வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பெருந்துறையில் போதைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

பெருந்துறையில் போதைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :27 நவம்பர் 2023, 6:53 pm


பெருந்துறை: பெருந்துறையில் போதைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறை சிப்காட் 2-ஆவது கிராஸில் உள்ள கேஸ் கம்பெனி அருகே ஒருவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பெருந்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்குசென்ற போலீஸாா் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகமது யாசின் மன்சூரி (21) என்பது தெரியவந்தது. பின்னா், அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பெருந்துறை, வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள டீக்கடையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 26 கிலோ குட்கா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், குட்கா விற்பனையில் ஈடுபட்ட பிச்சாண்டம்பாளையத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணி (48), ரங்கம்பாளையத்தைச் சோ்ந்த எட்வா்டு (49), அருண்குமாா் (25) ஆகிய 3 பேரை கைது செய்துதனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.