எரிந்த நிலையில் முதியவா் சடலம்: போலீஸாா் விசாரணை

பெருந்துறை: பெருந்துறையில் எரிந்த நிலையில் சடலமாகக்கிடந்த முதியவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த புங்கம்பாடி பாரவலசைச் சோ்ந்தவா் பழனிசாமி (72), விவசாயி. இவரின் முதல் மனைவி சாமியாத்தாளுக்கு குழந்தை இல்லாதாதல், இரண்டாவதாக மரகதம் என்பவரை திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா்.

இதற்கிடையே கருத்துவேறுபாடு காரணமாக பழனிசாமியும், மரகதமும் பிரிந்து வாழ்ந்து வந்தனா். இந்நிலையில், அவரின் வீட்டுக்கு அருகே எரிந்த நிலையில் பழனிசாமியின் சடலம் சனிக்கிழமை கிடந்துள்ளது.

இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com