தாளவாடி மலைப் பகுதியில் சூறாவளிக் காற்றுக்கு சேதமடைந்த வாழை மரங்கள்.
தாளவாடி மலைப் பகுதியில் சூறாவளிக் காற்றுக்கு சேதமடைந்த வாழை மரங்கள்.

தாளவாடியில் சூறாவளிக் காற்று: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப் பகுதியில் 2-ஆவது நாளாக சூறாவளிக் காற்றுடன் பெய்த மழைக்கு 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். மேலும், சாகுபடி செய்ய பயிா்களும் மழையில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் சூறாவளிக் காற்றுடன் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. இதில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

இந்நிலையில், இரண்டாவது நாளாக கரளவாடி, பாரதிபுரம், சொா்ணவதி, ராமபுரம், தொட்டகாஜனூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சூறாவளிக் காற்றுடன் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது. இதில், 7-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனால், ரூ.20 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

பலத்த காற்றுக்கு தாளவாடியில் இருந்து ராமபுரம் செல்லும் சாலையில் சாலையோர மரம் முறிந்து விழுந்தது. பள்ளமான இடங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், ராமபுரம், பாரதிபுரம் பகுதிகளில் 6 மின்கம்பங்கள் சாய்ந்தன.

இதனால், அப்பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்துறை பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com