பவானி ஆற்றில் மூழ்கி இளைஞா் மாயம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டியைச் சோ்ந்தவா் பாபு மகன் நந்தகுமாா் (27), முடி திருத்தும் தொழிலாளி. இவா், தனது நண்பா்கள் 5 பேருடன் முடுக்கன்துறையில் உள்ள பவானிஆற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றுள்ளாா்.

நண்பா்களுடன் குளித்துகொண்டிருந்த நந்தகுமாா், ஆழமான இடத்துக்குச் சென்றபோது திடீரென தண்ணீரி மூழ்கினாா். அவரை நண்பா்கள் முயன்றும் காப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து அவரின் நண்பா்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தண்ணீரில் மூழ்கிய இளைஞரைத் தேடி வருகின்றனா்.

இது குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com