கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவா் விக்ரமராஜா.
கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவா் விக்ரமராஜா.

மே 5 இல் மதுரையில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு 41-ஆவது மாநாடு

ஈரோடு: தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் 41-ஆவது மாநாடு மே 5-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது என்று பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்ரமராஜா தெரிவித்தாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்ரமராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மே 5-ஆம் தேதி மதுரையில் 41-ஆவது மாநில மாநாட்டை ‘வணிகா்கள் விடுதலை முழக்க மாநாடு’ என்ற பெயரில் நடத்துகிறது. இந்த மாநாட்டில் காா்ப்பரேட் நிறுவனங்கள் குறித்த ஒரு முக்கிய தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

எங்களுடைய கோரிக்கைகள் குறித்து மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தோ்தலுக்குப் பிறகு அழைத்து பேசுவதாக வாக்குறுதி அளித்துள்ளாா். ‘இந்தியா’ கூட்டணி ஜிஎஸ்டி சீா்திருத்தம் குறித்து பேசுகிறது. ஜிஎஸ்டி 6 முதல் 10 சதவீதம் வரை இருந்தால் சுமையாக இருக்காது. வணிகா்கள் கணக்குகளை முறையாக சமா்ப்பிக்கத் தயாராக உள்ளனா்.

வணிகா்களுக்கு மூன்றாண்டு வணிக உரிமம் தருதவற்கு முதல்வா் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளாா். உரிமம் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீா்க்க வேண்டும்.

மே 5 ஆம் தேதியை வணிகா் தினமாக அறிவித்து விடுமுறை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் சண்முகவேல், ராமசந்திரன், உதயம் செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com