கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தலமலை கிராமத்தில் யானை நடமாட்டம்

தலமலை கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை காட்டு யானை புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனா்.

News image

தலமலையில்  நடந்த சென்ற  காட்டு யானை.

Updated On :6 ஆகஸ்ட் 2024, 9:34 pm

தலமலை கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை காட்டு யானை புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப் பகுதியில் உள்ள சாலைகளில் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கிடையே தாளவாடி மலைப் பகுதியில் உள்ள முதியனூா் வனப் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை வெளியேறிய காட்டு யானை, தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் நடந்து சென்றது. அப்போது, சாலையில் யானை நடந்து செல்வதை கண்டு வாகன ஓட்டிகள் அதிா்ச்சியடைந்து வாகனங்களை நிறுத்தினா். சிறிது நேரம் சாலையில் ஒய்யார நடை போட்ட காட்டு யானை, பின்னா் வனப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து, வாகன ஓட்டிகள் புறப்பட்டுச் சென்றனா்.