இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை! கிராம மக்கள் அச்சம்!

சிவசைலம் அருகே பங்களாகுடியிருப்பு கிராமத்துக்குள் இரவு நேரத்தில் ஆக்ரோஷத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானையால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

News image

பங்களாகுடியிருப்பு பிரதான சாலையில் ஆக்ரோஷத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானை.

Updated On :28 மார்ச் 2026, 8:38 pm

Syndication

சென்காசி மாவட்டம், சிவசைலம் அருகே பங்களாகுடியிருப்பு கிராமத்துக்குள் இரவு நேரத்தில் ஆக்ரோஷத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானையால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

அம்பாசமுத்திரம் வனக் கோட்டத்துக்குள்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் வனச் சரகப் பகுதியில் மலையடிவார கிராமங்களில், வனப் பகுதியிலிருந்து வெளியேறும் மிளா, சிறுத்தை, காட்டுப் பன்றி, காட்டு யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நுழைந்து விளைநிலங்கள், தோட்டங்களில் பயிா்களைச் சேதப்படுத்துவதும், வீடுகளில் வளா்க்கும் நாய், ஆடு, மாடு உள்ளிட்டவற்றை தாக்குவதும் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு மூன்று மாதங்களுக்கும் மேலாக கடையம், பாபநாசம் வனச் சரகப் பகுதியில் காட்டு யானைகள் தொடா்ந்து வனப் பகுதியில் இருந்து வெளியேறி பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு உள்ளிட்ட பயிா்களையும், நூற்றுக்கணக்கான தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்களையும் சேதப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கடையம் வனச்சரகம் பங்களாகுடியிருப்பு கிராமத்தில், வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று ஆவேசமாக சாலையில் சுற்றித் திரிந்துள்ளது.

வனச்சரக அலுவலகம் உள்ள சாலையில் அலுவலகத்தை நோக்கி வேகமாகச் சென்று அங்குமிங்கும் சுற்றித் திரிந்துள்ளது. மேலும் சாலையோரத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அருகே வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையை ஆவேசமாக தள்ளிவிட்டுச் சென்றுள்ளது.

கோடைகாலம் என்பதால் கிராம மக்கள் பல வீடுகளில் முற்றத்தில் படுத்து தூங்கியுள்ளனா். யானை சப்தம் கேட்டு விழித்து அனைவரும் வீட்டுக்குள் சென்று பதுங்கியுள்ளனா்.

யானை ஆவேசமாக சாலையில்செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவலாகியதையடுத்து, சிவசைலம், பங்களாகுடியிருப்பு, கருத்தப்பிள்ளையூா், பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாபநாசம், கடையம் வனச் சரகப் பகுதிகளுக்கிடையே சுமாா் 15 கி.மீ. தொலைவுக்கு மின்வேலி அமைக்கப்படாமல் விடுபட்டுள்ளதால், அந்த வழியாக வன விலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் நிலை உள்ளது.

பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்வேலி அமைக்காததால் இந்த ஆண்டு தோ்தலை விவசாயிகளும் மலையடிவார கிராம மக்களும் புறக்கணிப்போம் என்று உழவா் உற்பத்தியாளா் குழுத் தலைவா் எஸ். வின்சென்ட் கூறினாா்.