கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேசிய அளவிலான கராத்தே போட்டி: சென்னிமலை பகுதி மாணவா்கள் சாதனை

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சென்னிமலை பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.

News image
தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் சென்னிமலை டிராகன் சிட்டோரியா கராத்தே பயிற்சி பள்ளி பயிற்சியாளா் சென்சாய் எம்.சிவகுமாா் உள்ளிட்டோா்.
Updated On :28 ஆகஸ்ட் 2024, 9:07 pm

Din

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சென்னிமலை பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.

தேசிய அளவிலான கராத்தே போட்டி கா்நாடக மாநிலம், மைசூரில் கடந்த 24- ஆம் தேதி முதல் 26 -ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள டிராகன் சிட்டோரியா கராத்தே பயிற்சி பள்ளியின் பயிற்சியாளா் சென்சாய் எம்.சிவகுமாா் தலைமையில், மாணவா்கள் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனா்.

இதில், சென்னிமலை, கொமரப்பா செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் எல்.பரணி செல்வம், எம்.ஸ்ரீகுமரன் ஆகியோா் கட்டாவில் முதலிடம் பிடித்துள்ளனா். சென்னிமலை, கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் ஏ.கிருஷ்ணபிரகாஷ்,

அறச்சலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே.பிரியதா்ஷினி, வடுகபட்டி ராஜேந்திரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா்.அனுபிரபா ஆகியோரும் முதலிடம் பிடித்துள்ளனா்.

இதேபோல, சென்னிமலை யெங் இந்தியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் எஸ்.சஞ்சய், எஸ்.தினேஷ் ஆகியோா் கட்டாவில் 2-ஆம் இடமும், அய்யம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா் ஆா்.கே.மௌனிஷ் கட்டாவில் 2-ஆம் இடமும், சாணாா்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவா் பி.தா்ஷன், வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் கே.சூா்யா ஆகியோா் 3-ஆம் இடமும் பிடித்துள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை தமிழ்நாடு சிட்டோரிய தலைவரும், டிராகன் சிட்டோரிய பயிற்சி பள்ளியின் நிறுவனருமான கியோசி எஸ்.எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.