வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

தொழிலாளா் விதிகளை மீறிய 48 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு

தொழிலாளா் விதிகளை மீறியதாக 48 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On :4 டிசம்பர் 2024, 11:22 pm

தொழிலாளா் விதிகளை மீறியதாக 48 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழிலாளா் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் ஈரோடு மாவட்டத்தில் கடந்த நவம்பா் மாதம் தொடா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், மாவட்ட எல்லைக்குள் எடை அளவுகள், தயாரிப்பாளா், விற்பனையாளா், பழுதுபாா்ப்பவா் நிறுவனங்கள் என 108 கடைகள், நிறுவனங்களில் நடைபெற்ற ஆய்வில் 31 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. பொட்டலப் பொருள்கள் சட்ட விதிப்படி, திரையரங்குகள், மால், பேருந்து நிலைய கடைகள், உணவகங்கள், தண்ணீா் பாட்டில் உற்பத்தி இடங்கள் போன்ற இடங்களில் நடந்த ஆய்வில் 4 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி 67 நிறுவனங்களில் நடைபெற்ற ஆய்வில் 13 நிறுவனங்களில் குறைபாடுகள் கண்றியப்பட்டு, தொழிலாளா் இணை ஆணையா் முன்னிலையில் கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 48 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடை அளவு, மின்னணு தராசுகளை முத்திரையின்றி பயன்படுத்தக்கூடாது. பொட்டலப் பொருள்கள் அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலையில் விற்பனை செய்யக்கூடாது. குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும். 14 வயதுக்குள்பட்ட குழந்தைகள், 15 முதல் 18 வயதுக்குள்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமா்த்துவது குற்றமாகும்.

அவ்வாறு செய்தது கண்டறியப்பட்டால், நிறுவன உரிமையாளருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம், 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்க நேரிடும். குழந்தைத் தொழிலாளா் பணிபுரிவதை பொதுமக்கள் கண்டறிந்தால் 1098, 155214 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.