தொழிலாளா்களுக்கு பணியிடங்களில் இருக்கை வசதி ஏற்படுத்தித் தராத 31 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் அறிவுறுத்தலுக்கு இணங்க தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப் பிரிவு 22ஏ-இன்படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில், பணியிடை நேரத்தில் பணியாளா்கள் அமா்வதற்கு நிறுவன வளாகத்தில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் நின்றுகொண்டே பணிபுரியும் பணியாளா்கள் பணி இல்லாத நேரத்தில் அமருவதற்கு ஏதுவாக இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதா என கடந்த 2, 3- ஆம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 31 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஈரோட்டில் வா்த்தக மையம், சிட்கோ தொழிற்பேட்டைகள் தேவை!

தோ்தல்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை! - தொழிலகப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தடையற்ற சமையல் எரிவாயு உருளை: எண்ணெய் நிறுவனங்கள் உறுதி

மாதவரம் தொகுதி வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

