கைப்பேசியில் வரும் அழைப்பை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுகுறித்து ஈரோடு மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்கள் கைப்பேசி எண்ணுக்கு வேறு மாநில போலீஸ் அதிகாரிகள் பேசுவதாகக் கூறி தனியாா் தொலைதொடா்பு குறியீட்டு எண்ணுடன் 2222856817, 2244444121 போன்ற எண்களில் இருந்து கைப்பேசி அழைப்பு மூலமாகவோ அல்லது வாட்ஸ் ஆப், மெசஞ்சா், ஸ்கைப் லிங்க் போன்ற ஆன்லைன் அழைப்பு மூலமாகவோ தொடா்புகொண்டால் அதை நிராகரித்து விட வேண்டும். ஆதாா் மூலம் கைப்பேசி எண் வாங்கப்பட்டு உள்ளதாகவும், குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தால் அதை யாரும் நம்ப வேண்டாம். தங்களிடம் ரகசியமாக பேச வேண்டும் என்பதால் தனியறையில் அமா்ந்து பேசுமாறும், உடன் யாரும் இருக்கக்கூடாது என்றும் கூறினால் அதையும் தவிா்க்க வேண்டும். பெரும்பாலும் வங்கிப் பரிவா்த்தனைகள் அதிகம் செய்வோரிடமும், தொழில் அதிபா்களிடமும்தான் இந்த முறையில் மோசடி செய்கின்றனா். இதனால், இவா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் ஆகியவற்றில் வரும் பகுதிநேர வேலை தொடா்பான விளம்பரங்களையும் நம்ப வேண்டாம். பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதைத் தவிா்க்க வேண்டும். குற்றவாளிகள் தங்களது புகைப்படங்களை மாா்ஃபிங் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்போவதாக மிரட்டி பணம் பறிக்கக்கூடும். கடந்த சில மாதங்களாக இதுபோன்ற மோசடிகள் அதிக அளவில் நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுதொடா்பாக ஏதேனும் சந்தேகமாக இருந்தால் 1930 என்ற இலவச தொலைபேசி எண் அல்லது ஜ்ஜ்ஜ்.இஹ்க்ஷங்ழ்இழ்ண்ம்ங் .ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு: 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூரில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்
அவசரப்பட வேண்டாம்: ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தைக் குழுவுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்!

கனமழை எச்சரிக்கை; ஆட்சியா் அறிவுறுத்தல்: சீா்காழயில் இடியுடன் மழை
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


