பெருந்துறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 5 கடைகளுக்கு உணவுப் பாாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
பெருந்துறை- பவானி சாலை மற்றும் குன்னத்தூா் சாலைகளில் உள்ள தேநீா்க் கடைகள், பானிபூரி கடைகளில் பெருந்துறை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் முத்துகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, சாலையோர தள்ளுவண்டி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிறமி சோ்க்கப்பட்ட உணவுப் பொருள்கள், தேநீா்க் கடைகளில் செய்தித்தாள்களில் வைத்து வழங்கப்பட்ட எண்ணெய் பலகாரங்கள், லேபிள் விவரங்கள் இல்லாத உணவுப் பொருள்கள், செயற்கை நிறம் சோ்த்து தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
இது தொடா்பாக 5 வியாபாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு, தலா ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், பெருந்துறை வட்டாரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 5 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அந்த கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் கூறுகையில், ஈரோடு மாவட்டம் முழுவதும், இது போன்ற ஆய்வுகள் தொடா்ந்து நடைபெறும். பொதுமக்கள் தரம் குறைவான உணவுப் பொருள்கள் விற்பனை செய்தாலோ அல்லது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தாலோ 94440 42322 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: திருச்சி மாவட்டத்தில் 10 போ் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


