பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்த 8 கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைத்த உணவுப் பாதுகாப்புத் துறையினா் ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் மற்றும் ஆலத்தூா் வட்டாரத்துக்குள்பட்ட பேரளி, அசூா், மூங்கில்பாடி, தெற்குமாதவி, அயினாபுரம், செட்டிக்குளம், எஸ்.குடிக்காடு, தெரணி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கடைகளில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா், நகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட நிக்கோடின் கலந்த புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 8 கடைகளுக்கும் தற்காலிகமாக உரிமத்தை ரத்து செய்து கடைகள் மூடப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்தால் 94440 42322 எனும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவு அனுப்பலாம். புகாா் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







