மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சிப்காட் வளாகத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் அரசு மெத்தனம்: பெருந்துறை எம்எல்ஏ குற்றச்சாட்டு

பணியைத் தொடங்காமல் அரசு மெத்தனம் காட்டி வருவதாக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :6 ஜூலை 2024, 7:34 pm

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவுநீா் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியைத் தொடங்காமல் அரசு மெத்தனம் காட்டி வருவதாக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா், சட்டப் பேரவை தலைவா் அப்பாவுக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா், நல்லா ஓடையில் கலப்பதைத் தடுக்கும் வகையில் சிப்காட் வளாகத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு நவம்பா் மாதம்

தமிழக அரசு தெரிவித்தது. இந்தப் பணிகள் 6 முதல் 8 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 8 மாதங்களாகியும் இன்னும் அதற்கான பணிகளே தொடங்கப்படாமல் இருப்பது அரசின் மெத்தனத்தைக் காட்டுகிறது. மேலும், சிப்காட் வளாகத்தில் உள்ள 63 ஆயிரம் டன் திடக் கழிவுகள் 2 மாதங்களில் அகற்றப்படும் என்று தெரிவித்தது. இந்த உத்தரவாதமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், பெருந்துறையில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. போராடும் மக்களை போலீஸாா் கைது செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனா். இது வருத்தத்துக்குரிய விஷயமாகும்.

எனவே, தமிழக அரசு அறிவித்தபடி, பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவு நீா் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் எனக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.