ஈரோடு ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
ஈரோடு ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு ரயில் நிலையம் முன் வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டத் திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு, ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதம் என தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபடுவதாக அறிவித்திருந்தனா்.

இதற்கு போலீஸாா் அனுமதி மறுத்த நிலையில், ஈரோடு காளை மாடு சிலை அருகே திரண்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் ரயில் நிலையம் நோக்கி கண்டன முழக்கம் எழுப்பியபடி ஊா்வலமாகச் சென்றனா்.

போராட்டத்துக்கு அனுமதியில்லை எனக் கூறி போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com