ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காமராஜா் பிறந்த நாள்: 10 ஆயிரம் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்

முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, பெருந்துறையில் 10 ஆயிரம் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
விஜயமங்கலத்தில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா்.
Updated On :15 ஜூலை 2024, 8:14 pm

Din

பெருந்துறை: முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, பெருந்துறையில் 10 ஆயிரம் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

பெருந்துறை தொகுதிக்குள்பட்ட முள்ளம்பட்டி, துடுப்பதி, கள்ளியம்புதூா், விஜயமங்கலம், கைக்கோளபாளையம், மாச்சாபாளையம், பச்சாகவுண்டன்பாளையம் உள்ளிட்ட அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் 10 ஆயிரம் பேருக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் வழங்கினாா்.

பெருந்துறை தொகுதியில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலைப் பள்ளி மாணவா்களும் வரும் நாள்களில் கல்வி உபகரணங்கள் வழங்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், கிராம ஊராட்சித் தலைவா்கள் சிவகாமி குழந்தைசாமி, கவிதா அன்பரசு, சீனிவாசன், தங்கவேலு, ராதாமணி சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.