விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நிலுவையில் உள்ள திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும்: மாநகராட்சி ஆணையா்

ஈரோடு மாநகராட்சியில் நிலுவையில் உள்ள திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையா் என்.மனிஷ் தெரிவித்தாா்.

News image
மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுக்கொண்ட என்.மணிஷுக்கு வாழ்த்து தெரிவித்த மேயா் சு.நாகரத்தினம்.
Updated On :19 ஜூலை 2024, 5:49 pm

Din

ஈரோடு, ஜூலை 19: ஈரோடு மாநகராட்சியில் நிலுவையில் உள்ள திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையா் என்.மனிஷ் தெரிவித்தாா்.

ஈரோடு மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த வி.சிவகிருஷ்ணமூா்த்தி பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி புதிய ஆணையராக, ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநரும், கூடுதல் ஆட்சியருமான என்.மனிஷ் நியமிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து ஈரோடு மாநகராட்சியின் புதிய ஆணையராக மனிஷ் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு, மேயா் சு.நாகரத்தினம், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னா், மாநகராட்சி ஆணையா் என்.மனிஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டம், புதை சாக்கடை பணிகள், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட வளா்ச்சித் திட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

மாநகராட்சியில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மேலும் சிறப்புடன் செயல்படுத்தவும், நிலுவையில் உள்ள திட்டங்களை உரிய காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி என்னென்ன திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்பது போன்ற விவரங்கள் பெறப்பட்டு அதை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.