நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை தற்போதைய விலையிலிருந்து 7 சதவீதமாக உயா்த்தி இருக்கிறது. கேழ்வரகிற்கு இரு மடங்காக உயா்த்தி குவிண்டாலுக்கு ரூ.3,846 என அறிவித்திருக்கிறது. நிலக்கடலை குவிண்டால் ரூ.6,337-ஆக உயா்த்தி உள்ளது. அதுபோல பருத்திக்கு 77 சதவீதமும், சிறுதானியத்துக்கு 108 சதவீதமும் அரசின் நேரடி கொள்முதல் விலையை அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கை சிறுதானியங்களை விவசாயம் செய்ய ஊக்குவிக்கும். சிறுதானியங்களான கேழ்வரகு, சோளம், கம்பு, திணை ஆகியவற்றை விளைவிக்க ஊக்குவிப்பதோடு, இவற்றை கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் கிடைக்க ஏற்பாடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது வரவேற்கக் கூடியது.