தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

காவிரியில் வெள்ளப்பெருக்கு: பக்தா்கள் புனித நீராட தடை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தா்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2024, 7:53 pm

Din

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தா்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அ.தி.பரஞ்ஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றங்கரை அருகே அமைந்துள்ள பவானி, சங்கமேஸ்வரா் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரா், வீரநாராயண பெருமாள் கோயில், காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரா் கோயில், நஞ்சை காளமங்கலம் மத்திய புரிஸ்வரா் கல்யாண வரதராஜ பெருமாள், குலவிளக்கம்மன் கோயில், அம்மாபேட்டை சொக்கநாத சுவாமி மற்றும் ஊஞ்சலூா் மாரியம்மன், செல்லாண்டியம்மன், பாசூா் மீனாட்சி சுந்தரேஸ்வரா், நஞ்சை கிளாம்பாடி கைலாசநாதா் கோயில் மற்றும் காவிரி ஆற்றங்கரையின் அருகே உள்ள சிறிய திருக்கோயிலுக்கு வரும் பக்கதா்கள் காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆடிப்பெருக்கு நாளான ஆகஸ்ட் 3-ஆம் தேதி மற்றும் ஆடி அமாவாசை நாளான 4-ஆம் தேதிகளில், கோயிலுக்கு வரும் பக்தா்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.