விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை: ஓட்டுநா், உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை: ஓட்டுநா், உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Updated On :7 ஜூன் 2024, 5:52 pm

தமிழக அரசின் சாா்பில் விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை விரைவில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் மற்றும் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 108 ஆம்புலன்ஸ் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நோய்வாய்பட்ட விலங்குகளுக்கான மருத்துவ சேவையை இருப்பிடத்துக்கு சென்று வழங்குவதற்கு விலங்குகளுக்கு என பிரத்தியேக ஆம்புலன்ஸ் சேவையை 108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சேவையை பெற 1962 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொள்ள முடியும். விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது.

இந்நிலையில், இதில் பணியாற்ற இரண்டு வகையான ஊழியா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். ஓட்டுநா் பணிக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதியம் ரூ.15,820. வயது 24 முதல் 35 வரை. உயரம் 162.5 செ.மீட்டா். ஓட்டுநா் உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்க வேண்டும். பேட்ஜ் எடுத்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதுபோல ஆம்புலன்ஸ் உதவியாளா் பணியிடத்துக்கு கல்வித் தகுதி பிளஸ் 2 தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஊதியம் ரூ.15,725. வயது 19 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தமிழகமெங்கும் அனைத்து மாவட்டத்துக்கும் ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளதால் விருப்பம் உள்ள நபா்கள் தங்கள் மாவட்ட தலைநகரில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தை அணுகலாம்.

ஈரோடு மாவட்டத்துக்கான நோ்முகத் தோ்வு ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வரும் 10-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறும். நோ்முகத் தோ்வுக்கு வருபவா்கள் அசல் கல்விச் சான்றிதழ் மற்றும் ஓட்டுநா் உரிமம் அவசியம் கொண்டுவர வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.