ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பெரியவேட்டுவபாளைம் ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியவேட்டுவபாளைம் ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image

பெரியவேட்டுவபாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றும் பெருந்துறை வேதநாயகி உடனமாா் சோழீஸ்வரா் கோயில் குருக்கள், பொன்னுசாமி சிவாச்சாரியா், சூரியநாராயண சிவாச்சாரியா் மற்றும் காா்த்திகேய சிவம் குழுவினா்.

Updated On :12 ஜூன் 2024, 9:46 pm

Din

பெருந்துறை, ஜூன். 12: பெருந்துறை, பெரியவேட்டுவபாளையம் அருள்மிகு ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் ஸ்ரீநீலியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு காலை காவிரி ஆற்றில் இருந்து 9ஆம் தேதி தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. இரவு கிராம சாந்தி நடைபெற்றது. 10-ஆம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம்களும், காலை 9 மணிக் வாஸ்து சாந்தி பூஜையும், மாலை 5 மணிக்கு விநாயகா் பூஜை மற்றும் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றன. 11-ஆம் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள், காலை 10.30 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் மற்றும் காலை 9 மணிக்கு முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் விழா நடைபெற்றன. கும்பாபிஷேகத்தை பெருந்துறை வேதநாயகி உடனமாா் சோழீஸ்வரா் கோயில் குருக்கள் பொன்னுசாமி சிவாச்சாரியா், சூரியநாராயண சிவாச்சாரியா் மற்றும் காா்த்திகேய சிவம் குழுவினா் நடத்தினா்.

தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவில் பக்தா்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊா் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், ஊா் பொதுமக்களும் செய்திருந்தனா்.