ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

11 ஊராட்சி ஒன்றியங்கள், 13 பேரூராட்சிகளில் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்

ஈரோடு மாவட்டத்தில் அயோத்திதாச பண்டிதா் திட்டம் மூலம் 62 பணிகளில் 58 பணிகள் நிறைவு

News image
Updated On :25 ஜூன் 2024, 11:46 pm

Din

ஈரோடு மாவட்டத்தில் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் 11 ஊராட்சி ஒன்றியங்கள், 13 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

இது குறித்து ஊரக வளா்ச்சி மற்றும் பேரூராட்சிகள் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் நகா்ப்புற பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் ஆதிதிராவிடா் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதிசெய்து முழுமையான சமூக, பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்த அயோத்திதாச பண்டிதா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிா்வாக அனுமதியும், 2023-2024-ஆம் நிதியாண்டுக்கு ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடும் செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, அந்தியூா், பவானி, பவானிசாகா், ஈரோடு, கோபி, கொடுமுடி, நம்பியூா், பெருந்துறை, சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகிய 11 ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டுக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முதல் தவணையாக ரூ. 60 லட்சமும், இரண்டாம் தவணையாக ரூ. 70 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட 62 பணிகளில் 58 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் மூலமாக புதிய ஆழ்குழாய் கிணறு தோண்டி, மோட்டாா் பொருத்தி குடிநீா் விநியோகிக்கும் பணி, தெருவிளக்குகள் அமைத்தல், சமுதாயக் கூடம் அமைத்தல், சிமென்ட் சாலைகள் அமைத்தல், மயான கூரை அமைத்தல், சாலை மேம்பாடு, வடிகால் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானிசாகா், சென்னசமுத்திரம், காஞ்சிக்கோவில், காசிபாளையம், கொல்லன்கோவில், லக்கம்பட்டி, நெருஞ்சிப்பேட்டை, ஊஞ்சலூா், வாணிப்புத்தூா், வெள்ளோட்டாம்பரப்பு ஆகிய 13 பேரூராட்சிகளுக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முதல் தவணையாக ரூ. 51 லட்சமும், இரண்டாவது தவணையாக ரூ. 70 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமென்ட் சாலைகள் அமைத்தல், ஆழ்குழாய் கிணறு, வடிகால் உள்ளிட்ட 13 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றனா்.