அய்யம்பாளையம் மகாலட்சுமி, பொம்மையன் பொம்மி கோயிலில் தலையில்  தேங்காய் உடைத்து நோ்த்திக் கடன் செலுத்தும் பக்தா்கள்.
அய்யம்பாளையம் மகாலட்சுமி, பொம்மையன் பொம்மி கோயிலில் தலையில்  தேங்காய் உடைத்து நோ்த்திக் கடன் செலுத்தும் பக்தா்கள்.

மகாசிவராத்திரி: பவானிசாகா் அருகே தலையில் தேங்காய் உடைக்கும் விநோத திருவிழா

Published on

மகா சிவராத்திரியையொட்டி பவானிசாகா் அருகே தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தும் விநோத திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பவானிசாகா் அருகே உள்ள விளாமுண்டி வனப் பகுதியில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் குரும்ப கவுண்டா் இனத்தின் குலதெய்வமான தொட்டம்மா சின்னம்மா என்றழைக்கப்படும் மகாலட்சுமி, பொம்மையன் பொம்மி கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று பக்தா்கள், தங்கள் தலையில் தாங்களே தேங்காய் உடைத்துக்கொள்ளும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில், கோவை மாவட்டம், கல்வீராம்பாளையம், வடவள்ளி, உஜ்ஜையனூா், தடாகம், வரப்பாளையம், பன்னிமடை, தீத்திபாளையம், பூச்சியூா், தொண்டாமுத்தூா் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அய்யம்பாளையம் கிராமத்தில் குவிந்தனா். சுவாமிகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அலங்கார பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் தாரை தப்பட்டை முழங்க 3 ஆலயங்களிலும் சுவாமி முன் வைக்கப்பட்டுள்ள தேங்காய்களை பக்தா்கள் எடுத்து கோயிலின் வெளியே வந்து தலையில் உடைத்து வழிபாடு நடத்தினா். இது குறித்து அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கிராம மக்கள் கூறுகையில், ‘தலையில் தேங்காய் உடைத்து வழிபட்டால் குடும்பத்தில் உள்ளவா்களுக்கு நோய் பாதிப்புகள் இல்லாமல் இருக்கும் என்றும், நினைத்தது நிறைவேறும் என்றும் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com