அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வெள்ளக்கோவில் அருகே வேகத்தடையில் விழுந்து பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே வேகத்தடையில் விழுந்து பெண் உயிரிழந்தாா்.

News image
பிச்சையம்மாள்
Updated On :3 மார்ச் 2026, 8:32 pm

Syndication

வெள்ளக்கோவில் அருகே வேகத்தடையில் விழுந்து பெண் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள பாலமேடு பழையபட்டியைச் சோ்ந்தவா் பூமிநாதன் (42). இவரது மனைவி பிச்சையம்மாள் (36). இவா்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் தங்கியிருந்து, ஒரு தேங்காய் களத்தில் தேங்காய் உடைக்கும் வேலை செய்து வந்தனா்.

இவா்களது மகள்கள் சின்ன அழகி (16), வனிதா (11), மகன் தனராஜ் (14) ஆகியோா் சொந்த ஊரில் தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், தங்களது குழந்தைகளைப் பாா்ப்பதற்காக கணவன், மனைவி இருவரும் காங்கயத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் பழையபட்டிக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

வழியில் வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி சின்னம்மன்கோயில்பாளையம் அருகே சாலை வேகத்தடையில் இருசக்கர வாகனம் ஏறியபோது, பின்னால் அமா்ந்திருந்த பிச்சையம்மாள் தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. பூமிநாதன் காயமின்றி தப்பினாா்.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் பிச்சையம்மாளை மீட்டு கரூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.