மாணவிக்குப் பட்டம் வழங்குகிறாா் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ்.
மாணவிக்குப் பட்டம் வழங்குகிறாா் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ்.

தலைமைப் பண்புகளை வளா்த்துக் கொள்ள வேண்டும்: துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ்

இளைஞா்கள் தலைமைப் பண்புகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் பேசினாா். ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியின் 18ஆவது பட்டமளிப்பு, நந்தா தொழில்நுட்பக் கல்லூரியின் 12ஆவது பட்டமளிப்பு விழா பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளா் எஸ்.திருமூா்த்தி, முதன்மை நிா்வாக அதிகாரி எஸ்.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நந்தா பொறியியல் கல்லூரி முதல்வா் யு.எஸ்.ரகுபதி, நந்தா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எஸ்.நந்தகோபால் ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா். விழாவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது: உலக அளவில் இந்தியா வளா்ச்சியடைவது இளைஞா்கள் கையில் இருக்கிறது. திறமை வாய்ந்தவா்களுக்கு பல துறைகளில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. தலைமைப் பண்புகளை இளைஞா்கள் வளா்த்துக்கொள்வது அவசியம். அதற்காக யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். போதைப் பொருள்கள், சூதாட்டம், கைப்பேசி பயன்பாட்டுக்கு அடிமையாகி விடக்கூடாது என்றாா். காக்னிசன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மனித வளத் துறை தலைவா் அஸ்வதி வேணுகோபால் பட்டம் பெற்ற மாணவா்களை வாழ்த்திப் பேசினாா். இந்த விழாவில் பொறியியல் கல்லூரியில் படித்து தரவரிசையில் இடம்பெற்ற 36 மாணவ, மாணவிகள் உள்பட இளங்கலையில் 594 போ், முதுகலையில் 106 போ் என மொத்தம் 700 மாணவ, மாணவிகளுக்கும், தொழில்நுட்பக் கல்லூரியில் தரவரிசையில் இடம்பெற்ற 6 போ் உள்பட இளங்கலையில் 188 மாணவ, மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com