நட்சத்திர அந்தஸ்துடன் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும்போதே அரசியலில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் சரத்குமார். திமுக, அதிமுகவில் இணைந்து பணியாற்றி பின்னர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கியவர்.
17 ஆண்டுகள் சமகவை வழிநடத்திய அவர், பின்னர் கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். தேர்தல் பணிகளுக்கு இடையே தினமணிக்கு அவர் அளித்த நேர்காணல்:
காமராஜரின் கொள்கைகளைப் பரப்பவும், சமூக நீதியை நிலைநாட்டவும் தொடங்கப்பட்ட சமக}வின் கொள்கைகள் என்னவானது?
சமத்துவத்தைப் பரப்ப சமக தொடங்கப்பட்டது என்பது உண்மை.
1996-லேயே நான் கட்சியைத் தொடங்கியிருந்தால், இப்போது ஆட்சியைப் பிடித்திருப்பேன். பலர் சமத்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல் களம் ஜாதியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தற்போதும் கட்சியின் கொள்கைகள் நீடிக்கின்றன.
பாஜகவுடன் சமக இணைத்து இரண்டு ஆண்டு காலம் ஆன பின்பும் உங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட தேசியப் பொறுப்பு கிடைக்காததால் தேர்தலில் போட்டியிடவில்லையா?
தேசப் பற்று கொண்டவன் என்பதால் தேசியக் கட்சியின் தலைமையை ஏற்றுக் கொண்டு 2024-இல் பாஜகவுடன் சமகவை இணைத்தேன். ஒரு தொகுதிக்குள் அடைந்துவிட விரும்பாததால் தேர்தலில் போட்டியிடவில்லை. தேசிய அளவில் நிர்வாகப் பொறுப்பேற்றதும், 2031}இல் தமிழகத்தில் பாஜக ஆட்சியைக் கொண்டு வருவதற்கும் பாஜகவை வலுப்படுத்தவும் செயல்படுவேன். விரைவில் எனக்கு தேசிய அளவில் பொறுப்பு கிடைக்கும்.

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை - டிஎன்எஸ்
Summary
நீங்கள் தேர்தலில் போட்டியிடாததற்கு உண்மையான காரணம் என்ன?
நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என பாஜக விரும்பியது. என்னுடன் பாஜகவில் இணைந்த சமக தொண்டர்களுக்கு வாய்ப்பு கேட்டேன். அது கிடைக்காததில்தான் சற்று வருத்தம். தனிக் கட்சியாகத் தொடர்ந்திருந்தால் வாய்ப்புக் கிடைத்திருக்குமோ என்னவோ?
ஹிந்தியை மத்திய அரசு திணிக்கிறது என திமுக குற்றஞ்சாட்டுகிறதே...
மத்திய அரசின் திட்டங்களை கண்மூடித்தனமாக திமுக அரசு எதிர்க்கிறது. மூன்றாவது மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் என பாஜக அரசு கூறுகிறது. ஹிந்தியைத் திணிக்கவில்லை. அந்த மூன்றாவது மொழி ஹிந்தி என்று சொல்லவும் இல்லை. கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. பெரும்பாலான திமுக தலைவர்களின் குழந்தைகள் ஹிந்தி படிக்கும்போது, மற்றவர்கள் கற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்வது அரசியல் தவிர வேறில்லை.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நாட்டிலேயே அதிக அளவில் இருக்கும்போது, இரட்டை என்ஜின் அரசு இருந்தால்தான் தமிழகத்தில் வளர்ச்சி கிடைக்கும் என பாஜக பிரசாரம் செய்கிறதே...
மத்திய அரசின் உதவி இல்லாமல் தமிழகத்தின் வளர்ச்சி சாத்தியமில்லை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மத்திய அரசின் நிதி தமிழக அரசுக்கு கிடைக்கவில்லை. ஆனால், தமிழகத்தின் அனைத்துத் திட்டங்களுக்கும் நிதி கிடைக்கவில்லை என திமுக அரசு குற்றஞ்சாட்டுகிறது. தமிழகத்தில் பெரும் தொழிற்சாலைகள், அணைகள் திட்டங்களைச் செயல்படுத்தியவர் காமராஜர். இதற்கு மத்திய அரசுடன் பரஸ்பர ஒத்துழைப்பு இருந்ததுதான் காரணம். ஆகையால், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகத்துக்கு வளர்ச்சி ஏற்படும் இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் தமிழகத்தின் வளர்ச்சி இதைவிட இரு மடங்கு அதிகரிக்கும்.
இலவச திட்டங்கள் தேவையானதா?
மகளிருக்கான திட்டங்களை வரவேற்கிறேன். ஆனால், பொருளாதார வளர்ச்சிக்கு இலவச திட்டங்களைத் தவிர்க்க வேண்டும். கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி பெண்கள் வளர்ச்சி அடைய வேண்டும்.
விஜய்யின் வருகை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
அரசியல் புரிதல் இல்லாமல் இளைஞர்கள் விஜய்யின் பின் செல்வது வருத்தமளிக்கிறது. விஜய் நல்ல நடிகர் என்பதால் கூட்டமாக அவர்களின் ரசிகர்கள் கூடுகிறார்கள். அவரது கட்சிக்குதான் அவர்கள் வாக்களிப்பார்கள் என உறுதியில்லை. விஜய்க்கு கொள்கையே இல்லை. எந்தவித செயல் திட்டத்தையும் அவர் முன்மொழியவில்லை. முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை எதிர்ப்பது மட்டும் அரசியல் இல்லை. தமிழகத்தின் ரூ. 10 லட்சம் கோடி கடனை எப்படி அடைப்பார் என விஜய் கூறவில்லை. ஆனால், மக்களுக்கு வீடு, இருசக்கர வாகனம் அளிப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். அவருக்கு நிர்வாகம் குறித்த புரிதலின்மையின் வெளிப்பாடுதான் இது.
அரசியல்வாதியாக விஜய்யை நீங்கள் எப்படி அனுமானிக்கிறீர்கள்?
மக்களையே சந்திக்காதவர் எப்படி தலைவராக இருக்க முடியும்? தனது கட்சியினர் 41 பேர் உயிரிழந்தபோது அவர்களைச் சந்திக்க விஜய் ஏன் போகவில்லை? தனது கட்சிக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாதவர் எப்படி தலைவராக இருக்க முடியும்? நல்லது, கெட்டதைப் பார்க்காமல் சொகுசு கேரவனிலிருந்து கோட்டைக்குச் சென்றுவிடலாம் என்பது எந்த விதமான அரசியல்? அவரது உருவபொம்மையை தூக்கிச் சென்று வாக்கு சேகரிப்பது என்ன கலாசாரம்?
சக நடிகராக விஜய் இருக்கட்டும், சக அரசியல்வாதியாக விஜய்யை எப்படி எடை போடுவீர்கள்?
அறிவு, ஆற்றல், திறன், மக்கள் மீது உண்மையான பாசம் மிக்கவர்களை வருங்காலத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் கட்சியைத் தொடங்கினார். அதற்கு முன் களத்துக்கே வராமல் மக்களுக்கு நல்லது எதுவும் செய்யாமல் வாக்குகளைக் கேட்பவர் தலைவராக முடியாது. விஜய்க்கு எந்தவித அடிப்படைத் தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை.
கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் களம் காணும் சீமான் வெற்றி பெறாதது ஏன்?
தொடர்ந்து தனித்துப் போட்டியிடும் சீமானின் முயற்சியைப் பாராட்டுகிறேன். தமிழ் தேசியம் கொள்கைகளிலிருந்து அவர் மாற வேண்டும். பல்வேறு மொழிகள் உள்ள தமிழகத்தில் பொதுவாகப் பேசினால்தான் அரசியலில் வெற்றி பெற முடியும்.
உங்கள் பிரசாரத்தில் மக்களைக் கவர என்ன வியூகம் வகுத்துள்ளீர்கள்?
மத்திய அரசின் திட்டங்களை முன்வைத்து பிரசாரம் செய்வேன். எதிர்க்கட்சிகளைக் குறை சொல்லும் அரசியலுக்கு மாற்றாக மின் பற்றாக்குறையைத் தீர்க்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் மத்திய அரசுடன் இணைத்து செயல்படும் அரசு தேவை என வலியுறுத்துவேன்.
ஜனநாயகன் திரைப்படம் நீண்ட காலமாக வெளியாகாததற்கு பாஜக காரணமா?
நான் நடித்த "அடங்காதே' படம் நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. மாற்றுக் கருத்து இருந்தால் ஆய்வுக் குழுவிடம் முறையிட்டிருக்க வேண்டும். தணிக்கைத் துறையினர் மீது நம்பிக்கை இல்லாமல் நீதிமன்றத்துக்குச் சென்றதால் ஜனநாயகன் படம் நின்றது. இதற்கு பாஜகவை ஏன் குற்றம் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
Summary
Vijay Lacks Leadership Qualities! Sarathkumar's Exclusive Interview!
தொடர்புடையது

காரைக்குடியில் பேசாமல் சென்றது ஏன்? விஜய்க்கு ப. சிதம்பரம் கேள்வி

விஜய்க்கு அரசியல் தெரியாது: டி.கே.எஸ். இளங்கோவன்

விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்!

பொருளாதார அறிக்கையும், 2047 இலக்கும்...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


