தமிழக முதல்வராகப் பதவியேற்ற தவெக தலைவர் ச.ஜோசப் விஜய்க்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ச.ராமதாஸ் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தமிழகத்தில் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கும் அவரது அமைச்சரவையில் அங்கம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள புதிய தமிழக அரசு, தமிழக மக்களின் நலனையும், சமூக நீதியையும், வளர்ச்சியையும் முன்னிறுத்தி சிறப்பான ஆட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த புதிய அரசு மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நல்லாட்சியை வழங்க வேண்டும்.
மேலும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரையும் இணைத்து செயல்பட்டு வெற்றிகரமான நிர்வாகத்தை வழங்க வாழ்த்துகள். பதவி ஏற்ற உடன் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கவும், போதை ஒழிப்புக்கு சிறப்பு படை உருவாக்கவும் முதல் கையொப்பம் இட்டமையை வரவேற்று எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்திட வேண்டும். அவற்றை கொண்டு உரிய சமூகங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.
ஜோசப் விஜய்க்கு பெரும்பாலும் இளைஞர்களும், மகளிர்களும் வாக்களித்து உள்ளனர். அவர்களின் நலன் கருதி தமிழகத்தில் முழு மது விலக்கை கொண்டு வர வேண்டும் மற்றும் போதை வஸ்துகள் இல்லாமல் செய்ய வேண்டும். இதை இந்த ஆட்சியில் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு செய்ய வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
மரபு மீறிய செயல்
தமிழ்நாடு அரசியல் பண்பாடு மற்றும் மரபுகளின் எந்த ஒரு அரசு நிகழ்வாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். நிகழ்ச்சி நிறைவடையும்போது தேசிய கீதம் பாடப்பட்டுவது பல ஆண்டுகளாக மரபாக உள்ளது. இந்த மரபு தான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற தமிழக முதல்வர் பதவி ஏற்பு நிகழ்வில் இந்த பாரம்பரிய மரபு மாற்றப்பட்டுள்ளது. இன்றைய தமிழக முதல்வர் பதவியேற்பு நிகழ்வை ஆளுநர் மாளிகையின் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து உள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலில் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மூன்றாம் நிலையில் வைத்தது மரபு மீறிய செயலாகும். இந்த தவறுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்தத் தவறு மீண்டும் தொடரக்கூடாது. புதியதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு இதன் பிறகு நடைபெற உள்ள அனைத்து நிகழ்வுகளிலும் மற்றும் விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். நிகழ்ச்சிகள் தொடங்கும் போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தையும், நிறைவடையும்போது தேசிய கீதத்தையும் பாடுவதற்கு வழி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக செயல் தலைவர் ப. ஸ்ரீகாந்தி ராமதாஸ் வாழ்த்து
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று “தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றுள்ள ச.ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள்.
தமிழ்நாட்டின் இன்றைய தலையாயத் தேவைகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டியதும் தான். அவற்றுக்கு வகை செய்யும் திட்டங்களை முதல்வர் ச.ஜோசப் விஜய் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழக மக்களின் நலனையும், மாநிலத்தின் முன்னேற்றத்தையும் முதன்மையாகக் கொண்டு, வரும் 5 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, ஜனநாயக ரீதியில் சிறந்த ஆட்சியை நடத்திட வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.
Summary
Regarding S. Ramadoss's congratulations to TVK leader S. Joseph Vijay upon assuming office as the Chief Minister of Tamil Nadu...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முன்னாள் முதல்வர் வாழ்த்து!
முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து!

தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!

விஜய்க்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாழ்த்து!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை


