ஈரோடு: தோ்தல் கெடுபிடிகளால் வெளியூா் வியாபாரிகள் வராததால் ஜவுளிச் சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஜவுளி சந்தை நடைபெறும். இந்தச் சந்தையில் வெளிமாநில, மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வந்து மொத்தமாக ஜவுளிகளை கொள்முதல் செய்வா். மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்தால் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனா்.
மேலும் ஆங்காங்கே வாகனச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜவுளிச் சந்தைக்கு வெளிமாவட்ட, வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் ஜவுளிச் சந்தையில் சுமாா் 25 சதவீத வியாபாரம் மட்டுமே நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து ஜவுளிச் சந்தை வியாபாரிகள் கூறியதாவது:
தோ்தல் நடத்தை விதிமுறைகளை சுட்டிக்காட்டி பணம் பறிமுதல் செய்வதும், அதையும் மீறி ஜவுளிச் சந்தையில் இருந்து வேட்டி, சேலைகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்றால் வாக்காளா்களுக்கு இலவசமாக கொடுப்பற்கு என்று கூறி அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
திருப்பூரில் இருந்து ஈரோட்டில் உள்ள கடைக்கு வியாபாரி ஒருவா் கொண்டு வந்த பனியன், பேன்ட் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு முன்பாக திருமணத்துக்கு வாங்கிச் சென்ற சேலைகளையும் பறிமுதல் செய்தனா். இதனால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனா். பணம் பறிமுதல் செய்தால் அந்த பணம் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு அச்சப்பட்டு வெளிமாநில, மாவட்ட வியாபாரிகள் ஜவுளிச் சந்தைக்கு வருவதில்லை. இதனால் 25 சதவீத வியாபாரம்தான் நடந்துள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோபி அருகே ரூ. 1.14 லட்சம் பறிமுதல்

சட்டப்பேரவைத் தோ்தல்: ஈரோடு சந்தையில் மாடுகள் விற்பனை சரிவு

சோதனையில் ரூ. 5.86 லட்சம் பறிமுதல்

தோ்தல் நடத்தை விதிமுறைகளால் நகை வியாபாரம் பாதிப்பு: நகை, வெள்ளி, வைர வியாபாரிகள் சம்மேளனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

