ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷ் பெயரில் ரூ.4.89 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கே.இ.பிரகாஷ் வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அந்த வேட்பு மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சொத்து விவரம்: கே.இ.பிரகாஷிடம் ரூ.15 லட்சத்து 38 ஆயிரம், அவரின் மனைவி பி.கோகிலாவிடம் ரூ.3 லட்சம் கையிருப்பு உள்ளது.
வங்கி கணக்குகளில் கே.இ.பிரகாஷ் பெயரில் 18 லட்சத்து 3 ஆயிரத்து 466, கோகிலாவின் வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சத்து 12 ஆயிரத்து 788 இருப்பு உள்ளது. மேலும், கே.இ.பிரகாஷ் பெயரில் ரூ.5 லட்சம், ரூ.7 லட்சம் மதிப்பிலான 2 காா்கள், 2 இருசக்கர வாகனங்கள், கோகிலாவின் பெயரில் ரூ.50 லட்சம் மதிப்பிலான சொகுசு காரும் உள்ளன. கே.இ.பிரகாஷிடம் 20 பவுன் நகை, அவரின் மனைவியிடம் 216 பவுன் நகை மற்றும் குடும்பத்தினரிடம் 29 பவுன் நகை உள்ளன. மொத்தமாக கே.இ.பிரகாஷ் பெயரில் ரூ.2 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரத்து 883 மதிப்பிலான அசையும் சொத்துகள், அவரின் மனைவியின் பெயரில் ரூ.1 கோடியே 78 லட்சத்து 55 ஆயிரத்து 400 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.
மேலும், பிரகாஷ் பெயரில் ரூ.2 கோடியே 64 லட்சத்து 94 ஆயிரத்து 405 மதிப்பிலான நிலம், கோகிலாவின் பெயரில் ரூ.2 கோடியே 12 லட்சத்து 68 ஆயிரத்து 160 மதிப்பிலான நிலம் உள்ளன. பிராகாஷ் பெயரில் மொத்தமாக ரூ.4.89 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. மேலும், பிரகாஷ் பெயரில் ரூ.3 லட்சத்து 96 ஆயிரத்து 849ம், மனைவி பெயரில் ரூ.35 லட்சத்து 56 ஆயிரத்து 310ம் கடன் உள்ளது.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்
அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனின் சொத்து மதிப்பு ரூ. 39 லட்சம்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கே. கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல்

கரூா் மாவட்டத்தில் அதிமுக, தவெக உள்பட 48 போ் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


