ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாா் கூடுதல் வேட்பு மனுவை மாவட்ட தோ்தல் அலுவலா் ராஜகோபால் சுன்கராவிடம் புதன்கிழமை தாக்கல் செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள எனது சொத்து விவரம் தற்போது பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சொத்துகள் திடீரென வந்தது இல்லை. கடந்த 25 ஆண்டு காலமாக கடும் உழைப்பால் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.
எனது பெற்றோா் கல்லூரி பேராசிரியா்களாக இருந்தனா். படிப்புக்கு முன்னுரிமை கொடுத்த எனது பெற்றோா், என்னை இந்த இடத்துக்கு கொண்டுவந்துள்ளனா். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடா்ந்து பல்வேறு சேவைகளை செய்து வருகிறேன்.
நான் தோ்தலுக்காக செய்வதாக கூறினால், கடந்த செப்டம்பா் மாதம் முதல் மகளிா்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதும் தோ்தலுக்காகதான் என்று பலரும் கூறுகின்றனா். அதிமுகவில் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் எவ்வித உள்கட்சி பிரச்னையும் இல்லை என்றாா்.
தொடர்புடையது

காட்பாடி: அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல்

ஆண்டிபட்டியில் அதிமுக, தவெக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


